இந்தியாவில் No 1... டாப் மாநிலங்களை தட்டிதூக்கிய தமிழகம்... TRB ராஜா சொன்ன ஸ்வீட் எடு கொண்டாடு நியூஸ்

x

ஏற்றுமதிகளில் டாப் 5 இடங்களில் உள்ள மாநிலங்களில், தமிழகத்தைத் தவிர்த்து நான்கு இதர மாநிலங்களின் ஏற்றுமதி அளவு, 2022-23இல் சரிந்துள்ளன.

2022 ஏப்ரல் முதல் 2023 ஜனவரி வரை குஜராத்தின் ஏற்றுமதி அளவு அதற்கு முந்தைய ஆண்டை விட 8.6 சதவீதம் குறைந்துள்ளது.

மகராஷ்டிராவின் ஏற்றுமதி அளவு 7.7 சதவீதமும், கர்நாடகாவின் ஏற்றுமதி அளவு 8.7 சதவீதமும், உத்தரபிரதேசத்தின் ஏற்றுமதி அளவு 7 சதவீதமும்

சரிந்துள்ளன.

இதே காலகட்டத்தில் தமிழகத்தின் ஏற்றுமதி அளவு 5.45 சதவீதம் அதிகரித்து, 3517 கோடி டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி அளவு இந்த காலகட்டத்தில் 97.3 சதவீதம் அதிகரித்து, 736 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.

எலக்ட்ரானிக்ஸ் துறையில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு செய்த முயற்சிகள் நல்ல பலன்களை அளித்துள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்