ஆசியப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்.. திருவிழாவாக மாறிய சொந்த ஊர்

x

சீனாவில் நடந்த ஆசியப்போட்டியில், தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், தொடர் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். டெல்லி மற்றும் சென்னையில் பிரதமர் மற்றும் முதலமைச்சரின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் பேரளத்திற்கு திரும்பினார். ஊர்மக்கள் அனைவரும் மேளதாளங்கள் முழங்க ராஜேஷ் ரமேஷை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் நடனமாடி மகிழ்ந்த அவர், பதக்கம் வெல்ல தூண்டுகோலாக இருந்த உடற்கல்வி ஆசிரியருக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்