கேரளா முதல்வரை சந்தித்த தமிழக முதல்வர் - பல திட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை

x

கேரளா முதல்வரை சந்தித்த தமிழக முதல்வர் - பல திட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை

கேரள மாநிலம் கோவளத்தில் நடைபெற உள்ள தென்னிந்திய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவனந்தபுரம் வந்துள்ளார். இந்நிலையில், கேரள

முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் கோவளத்தில் சந்தித்து உரையாடினர். அப்போது, கேரளா மற்றும் தமிழகம் தொடர்பான திட்டங்கள் குறித்து இருவரும்

விவாதித்தனர். இரு மாநில தலைமைச் செயலாளர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு மாநில முதல்வர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக

விவாதிக்கப்பட்டது. அப்போது, கேரளாவில் உள்ள தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் செயல்பாடு தொடர்பாக தெரிந்து கொள்ள, தமிழக

உயரதிகாரிகள் குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு, பினராயி விஜயனிடம் அமைச்சர் மனோதங்கராஜ் கேட்டுக் கொண்டார்.Next Story

மேலும் செய்திகள்