`வாட்டி வதைக்கும் வெப்ப அலை' -திடீரென கூடிய தேர்தல் ஆணையம் - வெளியாக போகும் முக்கிய அறிவிப்புகள்

x

கோடை வெப்ப அலைகளால் ஏற்படும் ஆபத்தை தடுப்பதற்கான பிரசார நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டது. ஆலோசனை கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெப்ப அலை வீசிவரும் நிலையில் மீதமுள்ள 6 கட்ட தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்