திடீரென டிரம்மில் வீசிய துர்நாற்றம்.. துண்டு துண்டாக வெட்டப்பட்ட மூதாட்டி. இறுதியில் வெளிவந்த தகவல்
பெங்களூரு கே.ஆர். புரம் பகுதியில் ஒரு பழைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் சோதனை நடத்தியபோது, ஒரு வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த ட்ரம்மில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டறிந்தனர். அந்த ட்ரம்மை திறந்து பார்த்த போது அதில் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. விசாரணையில், 70 வயதான சுசீலாம்மா என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ் என்ற நபர் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. கடன் தொல்லையால் தவித்து வந்த தினேஷ், அந்தக் கடனை அடைப்பதற்காக, மூதாட்டி அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
