சென்னை - திருச்சி இடையே 8 விமான சேவை திடீர் ரத்து... பயணிகள் அதிர்ச்சி

x

சென்னையிலிருந்து தினமும் 4 விமானங்களை இண்டிகோ ஏர்லைன்ஸ் இயக்கும். அதேபோல், திருச்சியில் இருந்து 4 விமானங்கள் சென்னைக்கு இயக்கப்படும். இந்நிலையில் இந்த 8 விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்தி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக விமானம் இயக்கப்படும் என்றும், விருப்பப்படும் பயணிகள், தங்கள் பயண டிக்கெட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்