ஸ்டெர்லைட் ஆலை வழக்கு - வெளியாக போகும் தீர்ப்பு

x

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆஜரான வேதாந்தா நிறுவன மூத்த வழக்குரைஞர் சித்தார்த் தவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு சீல் வைத்த விவகாரத்துக்கு எதிரான மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அப்போது தலைமை நீதிபதி இந்த மனு தொடர்பாக இறுதி விசாரணைக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என கேட்டதற்கு, ஏற்கனவே 2 நாட்கள் என இறுதி விசாரணைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு முன், மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் மீண்டும் கடந்த ஜனவரி 2-ம் தேதி முறையிடப்பட்டது. இதை பதிவு செய்த தலைமை நீதிபதி, பதிவாளரிடம் ஆலோசித்துவிட்டு உரிய தேதியை அளிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இறுதி விசாரணை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்