மாநில அளவிலான நீச்சல் போட்டி... மும்முரமாக விளையாடிய மாணவர்கள்

x

பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. 2 நாள் நடக்க கூடிய இந்த போட்டியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 33 பள்ளிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், வெற்றி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதால், மாணவர்கள் மும்முரமாக போட்டியில் பங்கேற்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்