வேலியே பயிரை மேய்ந்த சம்பவம்..9வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த எஸ்.எஸ்.ஐ. | Tamilnadu
சென்னை ராயபுரத்தில், நடைபயிற்சி சென்ற சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில், ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 9 ஆம் வகுப்பு சிறுமி, நடைபயிற்சி செல்லும்போது, அதே பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரான ஜெபக்குமார் என்பவர், சிறுமியிடம் அத்துமீறி ஆபாசமாக பேசி நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பெற்றோரிடம் கூறவே, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், ஜெபக்குமாரை காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
