இன்று முதல் சிறப்பு பேருந்துகள்...தயார் நிலையில் தலைநகர் சென்னை

x

தமிழ்நாடு முழுவதும் வரும் 12 ஆன் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து பிறமாவட்டங்களுக்கு இன்று முதல் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்

இன்று நாளை நாளை மறுநாள் என மூன்று நாட்கள் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல பேருந்துகள் இயக்கம்

தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக சென்னையில் இருந்து மொத்தம் 1,850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

இன்றையை தினம் மட்டும் 550 பேருந்துகள் சென்னையில் இருந்து பிறமாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளன

சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம்

கிழக்கு கடற்கரை சாலை வழியாக சிதம்பரம், பண்ருட்டி, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கம்


Next Story

மேலும் செய்திகள்