சென்னையில் ஒலி மாசு விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பு

x

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று முதல் வரும் 3ம் தேதி வரை ஒலி மாசு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.


இதையொட்டி வாகனங்களில் தேவையற்ற இடங்களில் ஹாரன்கள் ஒலிப்பதால் ஏற்படும் ஒலி மாசு குறித்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமை சென்னை அசோக் பில்லர் சிக்னல் அருகில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.


பள்ளி மாணவ மாணவிகளுடன் சேர்ந்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கிய காவல் ஆணையர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை பறக்க விட்டார்.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டால் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்