"என்னை விட்டுடுங்க போகணும்"..5 மாதத்தில் 4முறை காணாமல் போன மகன் - துடிதுடிக்க கதறி நின்ற பெற்றோர்..

x

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு சிறுவன் அடிக்கடி காணாமல் போய் பெற்றோருடன் சேர்த்து காவல் துறையினரையும் தலை சுற்ற வைத்து வருகிறான்...

கள்ளக்குறிச்சி வ.உ.சி நகரைச் சேர்ந்த தம்பதியின் 11 வயது மகன் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியேறுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளான்... சிறுவன் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் என அங்குமிங்கும் சுற்றித் திரிவதைப் பார்க்கும் பொதுமக்கள் போலீசுக்குத் தகவல் தந்து, அதிகாரிகள் சிறுவனைப் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் இதேபோல் 4 முறை நடந்து விட்டதாம். இப்படியாக ஒருமுறை சிறுவன் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட போது, அவனது தாய், அங்கு சென்று, தன் மகனைத் தானே பார்த்துக் கொள்வதாக எழுதி கொடுத்து விட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்... இந்த முறையும் காணாமல் போகவே, கள்ளக்குறிச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்பாக்குறிச்சி கிராமப் பகுதியில் சைக்கிளில் சுற்றி திரிந்து கொண்டிருந்துள்ளான். பொதுமக்கள் அளித்த தகவலின்படி போலீசார் சென்று விசாரித்த போது, தன்னை விட்டு விடுமாறும், சைக்கிளில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்றும் சேட்டை செய்துள்ளான். சமூக வலைதளங்கள் வாயிலாக சிறுவனின் பெற்றோரைக் கண்டுபிடித்த போலீசார், சிறுவனை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். பெற்றோரும் சிறுவனை காப்பகத்தில் ஒப்படைக்க யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்