வீட்டில் உயிரை மாய்த்து கொண்ட தாம்பரம் 18 வது வார்டு கவுன்சிலரின் மகன் - சிக்கிய கடிதத்தில் அதிர்ச்சி தகவல்

x

சென்னை கீழ்க்கட்டளையில், பெண் கவுன்சிலர் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சி 18 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ள பிரேமலதா என்பவரின் மகன் கோபிநாத், தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், தற்கொலைக்கு முன் கோபிநாத் எழுதிய கடிதத்தையும் மீட்டனர். அதில், தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் இருந்தது. எனினும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்