"பொய் சாட்சியம் அளித்ததாக வழக்கு தொடர வேண்டும்" - ஜெயக்குமார்

x

செம்மண் முறைகேடு வழக்கில், பிறழ் சாட்சியம் அளித்தவர்கள் மீது வழக்கு தொடர வேண்டுமென, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

"Should be prosecuted for perjury" - Jayakumar

அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான செம்மண் முறைகேடு வழக்கு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், அரசுத்தரப்பு சாட்சிகள் தொடர்ந்து பிறழ் சாட்சியம் அளித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்ய தனக்கு அனுமதியளிக்க வேண்டும் என, சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பிறழ் சாட்சியம் அளித்தவர்கள் மீது, பொய் சாட்சியம் அளித்ததாக வழக்கு தொடர வேண்டும் என்றும் கோரியுள்ளார். அரசியல் விரோதம் எனக் கூறி எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனது மனுவை விலக்கி ஒதுக்கக் கூடாது எனவும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்