"மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் காலணி" - அதிர்ச்சியில் பெற்றோர்

x

"மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் காலணி" - அதிர்ச்சியில் பெற்றோர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் காலணி மற்றும் புழு பூச்சிகள்

மிதப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியில், முறையான குடிநீரில் வழங்க வில்லை என்று

கூறப்படுகிறது. புழு பூச்சிகள் மிதக்கும் நீரை குடிக்க பயன்படுத்துவதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர் குற்றம்

சாட்டியுள்ளனர். இதை அறிந்தும் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டிய அவர்கள், தூய்மையான குடிநீர் வழங்க நடவடிக்கை

எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்