தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்.. திண்டுக்கல்லில் பயங்கர பரபரப்பு
தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்.. திண்டுக்கல்லில் பயங்கர பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கட்டிடத் தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ள பொம்மன்பட்டி
பகுதியில் அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று
நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் முத்தனாங் கோட்டையை சேர்ந்த கட்டட தொழிலாளி ராம்குமார் என்பது தெரிய வந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு
வெளியேறிய ராம் குமார் இன்று பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து ராம்குமாரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத்
தேடி வருகின்றனர்.
Next Story