பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை? போக்சோவில் சிக்கிய ஆசிரியர்கள்

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று ஆசிரியர்கள் உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்...
x

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று ஆசிரியர்கள் உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அங்குள்ள சுகுணாபுரம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சுகுணாபுரம் மாநகராட்சி உயர்நிலை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரனை கைது செய்தனர். அதேபோல் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர்கள் ராமகிருஷ்ணன், பாலசந்தர் ஆகிய இருவரை கோட்டூர் போலீசார் கைது செய்தனர். இது தவிர மதுக்கரை, நெகமம் ஆகிய இரு காவல்நிலையங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 3 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்