அலற விடும் நிபா வைரஸ்... மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் | Kerala | Nipha Virus

x

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிஃபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், சுகாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் பட்டன... நிபா வைரசால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டோருடனான தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலில் ஆயிரத்து 223 பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஓரிரு தினங்களாக புதிய நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், நிபா வைரஸ் தொற்று 2ம் கட்டம் ஏற்பட வாய்ப்பில்லை என சுகாதாரத் துறை கூறியது... இந்நிலையில், கோழிக்கோட்டில் இன்று முதல் கல்வி நிலையங்கள் அனைத்தும் 23ஆம் தேதி வரை மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. டியூஷன் மற்றும் கோச்சிங் மையங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஆன்லைன் மூலம் கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எந்த சூழலிலும் மாணவர்களை கல்வி நிலையங்களுக்கு வரவழைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்