ஒற்றை போட்டோவால் அலறும் தர்மபுரி - பரம ரகசியங்களை ஒழிக்க யாகமா?

x

தர்மபுரி கூட்டுறவு நகர வங்கியில், லாக்கர் முன் நெருப்பு மூட்டி ரகசிய பூஜை நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தர்மபுரி கூட்டுறவு நகர வங்கியில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, லாக்கர் முன் ரகசிய பூஜைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பூஜை இரவு 8.30 மணி வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது. புரோகிதர் மூலம் யாக குண்டம் அமைத்து நடத்தப்பட்ட பூஜையில், வங்கியின் துணை பதிவாளர் ராஜா, அவரது மனைவி, வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்டு பணியை இழந்த முன்னாள் ஊழியர்கள், தற்போது பணிபுரிந்து வரும் சில ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. வங்கியில் நடைபெறும் முறைகேடுகள் வெளியே தெரியாமல் இருக்கவே பூஜை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்