தேர்வில் காப்பி அடித்ததால் பள்ளியிலிருந்து நீக்கம் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு த*கொலை

x

விழுப்புரம் அருகே, ப்ளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் அருகே ஒருகோடி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். கடந்த 13-ந் தேதி நடந்த அரையாண்டு தேர்வில், மாணவி காப்பி அடித்ததுடன், சரியாக தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது. உடனடியாக அன்று மாலையே, மாணவியின் பெற்றோரை வரவழைத்த பள்ளி நிர்வாகம், நடந்த விவரத்தைக் கூறி, மாணவியை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தையான நேதாஜியை, செல்போனில் தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம், தங்களது மகளின் மாற்றுச் சான்றிதழை பெற்றுச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதன் பிறகு நேதாஜி தனது மனைவியுடன் பள்ளிக்கு சென்றபோது, மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த நேதாஜி, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். தகவலை அறிந்த உறவினர்கள், விழுப்புரத்தில் உள்ள பள்ளியை முற்றுகையிட்டு, மாணவியின் இறப்பிற்கு, பள்ளி ஆசிரியர்களே காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்குமாறு உறுதி அளித்ததை அடுத்து, உறவினர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்