பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 ஆக நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

x

பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 ஆக நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும், அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்து 549 பேர் தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அரசுப் பள்ளிகளில்

உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி, தையல், இசை உள்ளிட்ட பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கையாளுகின்றனர். தற்போது அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய்

தொகுப்பூதியமாக வழங்கப்படும் நிலையில், அவர்களின் ஓய்வு பெறும் வயதை அறுபதாக நீட்டித்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு செப்டம்பர் மாதம் முதல்

அமலுக்கு வரும் இந்த அறிவிப்பின் மூலம், சுமார் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பயனடைய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்