நடக்க முடியாமல் தவித்த யானை! - தாயை சுற்றி சுற்றி வந்த குட்டி யானை - மனதை கலங்கவைக்கும் காட்சி..!

x

சத்தியமங்கலம் வனப்பகுதியில் உடல் நலம் குன்றி படுத்துக்கிடக்கும் தாய் யானையை சுற்றி சுற்றி வரும் குட்டி யானையை, வனத்துறை மருத்துவ குழுவினர் பராமரித்து வருகின்றனர். பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது உடல் நலம் குன்றிய நிலையில் பெண் யானை படுத்து கிடப்பதை கண்டனர். அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை நடமாடிய நிலையில், மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று குட்டியானையை பராமரித்து வருகின்றனர். உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்