வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உப்பு உற்பத்தி...உப்பின் விலை ரூ. 4500 ஆக உயர்வு...!

x

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்ய இன்னும் 3 மாத காலம் ஆகும் என்பதால் உப்பு விலை உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு உப்பு உற்பத்தி நன்றாக நடைபெற்றதால் சுமார் 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு உப்பள உரிமையாளர்கள் உப்பை தேக்கி வைத்திருந்தனர். ஆனால், கடந்த மாதம் பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உப்பளங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் டண் உப்பு வீணானது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். வழக்கமாக தை மாதம் முதல் உப்பு உற்பத்தி தூத்துக்குடியில் துவங்கும் நிலையில் கனமழையால் உப்பள பாத்திகளில் மழைநீர் இன்னும் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் உப்பு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்... உப்பு உற்பத்தி செய்ய இன்னும் 3 மாத காலம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... இதனால் மழைக்கு முன்பு வரை ஒரு டன் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், சேதம் தட்டுப்பாடு ஆகியவற்றால் 4 ஆயிரத்து 500 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது... உப்பு உற்பத்தி செய்யப்பட்ட பிறகு விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்