95% மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சைதை துரைசாமி கொடுத்த வாக்குறுதி

x

பொதுத்தேர்வுகளில் 95 சதவீதம் மதிப்பெண் எடுத்து இருந்தால் போட்டி தேர்வில் வெற்றி பெற ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். ராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தேசிய சேவை மையம் துவக்க விழாவில் அவர் பங்கேற்றார். நாட்டு நலப்பணி திட்டத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி சைதை துரைசாமி கவுரவித்தார். தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 95 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்கள் இருக்கிறீர்களா என்று கேட்டு, அவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற ஆகும் செலவை ஏற்பதாக உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்