ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கோரி மனு - தமிழக காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

x

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கோரி மனு - தமிழக காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரும் மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 51 இடங்களில், அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை

அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி தர

வேண்டுமெனவும் கோரி ஆர்.எஸ் எஸ். நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க

காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி

அளிக்கப்பட்ட மனு மீது வரும் 22 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என காவல்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நீதிமன்றத்தில்

தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்