சொந்த ஊருக்கு ரூ.2.5 கோடி.. இலவச ஆம்புலன்ஸ்.. ஊர் மக்களை திக்குமுக்காட வைத்த நீதிபதி

சிவகங்கை அருகே தனது சொந்த கிராம வளர்ச்சிக்காக நீதிபதி ராமசாமி, இரண்டரை கோடி ரூபாய் சொந்த பணத்தை வழங்கியிருப்பது பாராட்டுக்களை பெற்றுள்ளது...
x

சொந்த ஊருக்கு ரூ.2.5 கோடி.. இலவச ஆம்புலன்ஸ்.. ஊர் மக்களை திக்குமுக்காட வைத்த நீதிபதி

சிவகங்கை அருகே தனது சொந்த கிராம வளர்ச்சிக்காக நீதிபதி ராமசாமி, இரண்டரை கோடி ரூபாய் சொந்த பணத்தை வழங்கியிருப்பது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இளையான்குடி அருகே வடக்கு விசுவனூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி, டெல்லி தேசிய லோக் அதாலத் நீதிமன்றத்தின் உறுப்பினராகவும், நீதிபதியாகவும் உள்ளார். இவர், "கிவிங் பேக் டூ வில்லேஜ்" என்ற பிரதமர் மோடியின் திட்டத்தில் இணைந்து இந்தியாவிலேயே முதல் முறையாக தனது சொந்த கிராமத்தில் செயல்படுத்தியுள்ளார். இதற்காக அவர் வழங்கியுள்ள இரண்டரை கோடி ரூபாய் நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் ஒன்றையும் வழங்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்