ரூ.2.33 கோடி அப்பு! - அதிரடியாக காட்டிய அதிகாரிகள்

x

சென்னைய ில் இருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற 2 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு செல்ல இருந்த விமானத்தில் வைரம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது இளைஞரிடம் விசாரித்தனர். இதில், சூட்கேசில் ரகசிய அறை வைத்து கடத்த முயன்ற 1004 கேரட் வைரக்கற்களை பறிமுதல் செய்தனர். அந்த நபரை கைது செய்த அதிகாரிகள், பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்