ஜவுளி தொழில் அதிபருக்கு`ஸ்வீட் அல்வா' கொடுத்த பேச்சியம்மாள்.. கூகுள் பேவில் கைமாறிய ரூ.12.5 லட்சம்

x

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர், ஜவுளி தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு, முகநூல் மூலம் சிவகாசியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியில் இருப்பதாக ரமேஷிடம் கூறிய பேச்சியம்மாள், வங்கியின் நகைகள் 380 கிராம் ஏலத்திற்கு வந்திருப்பதாகவும், அதற்காக 13 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய ரமேஷ், சிவகாசி பேருந்து நிலையம் அருகே, இளம் பெண் பேச்சியம்மாளை சந்தித்து, ரொக்கமாகவும், கூகுள் பே மூலமும் 12 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். பின்னர் அதனை பெற்ற பின், வங்கியில் பணத்தை செலுத்தி, நகையை வாங்கி வர வேண்டுமெனக் கூறி சென்ற பேச்சியம்மாள், நீண்ட நேரமாக வரவில்லை. செல்போனை ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ், இதுதொடர்பாக அளித்த புகாரின் பேரில், இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்