"சைதாப்பேட்டையில் வீடு எடுத்து தங்குங்கள்" - ஆளுநருக்கு பறந்த மெசேஜ்

x

முரசொலியில் வெளிவந்துள்ள தலையங்கக் கட்டுரையில், ஆளுநரால் ஒப்புதல் தரப்பட்ட உரையை ஆளுநரே வாசிக்க மறுப்பதாகவும், அதில் உள்ள கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்றும், உடன்பாடு இல்லாத உரையை வாசிக்க மறுக்க எதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்ப வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. திரும்பத் திரும்ப ஒரே தவறை ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார் என்றும், ஆளுநர் தனது பதவியில் இருந்தும் கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்தும் வெளியேறி, சைதாப்பேட்டையில் தனியாக வீடு எடுத்துத் தங்கி அரசியல் செய்ய வேண்டும் என்றும் முரசொலியில் விமர்சிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்