போலீசார் மீது ​​பெட்ரோல் குண்டு வீசி - சும்மா நின்ற இளைஞரை வெட்டிய ரவுடிகள் - சென்னையில் பயங்கரம்

x

போலீசார் மீது ​​பெட்ரோல் குண்டு வீசி - சும்மா நின்ற இளைஞரை வெட்டிய ரவுடிகள் - சென்னையில் பயங்கரம்

சென்னை ஆலந்தூரில் பெட்ரோல் குண்டுகளை வீசியும், வாகனங்களை சேதப்படுத்தியும் சென்ற ரவுடிகள் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து

வருகின்றனர். இரவு 8 மணியளவில், ஆலந்தூர் ஆபிரகாம் தெருவிற்குள் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன்

புகுந்துள்ளனர். பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன்,

அங்கிருந்த சாமி மடத்தில் பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். மேலும், சாலையோரம் நின்றிருந்த நவீன் என்ற இளைஞரை சராமாரியாக வெட்டியதில்,

அவர் படுகாயம் அடைந்துள்ளனர். பின்னர், விரைந்து வந்த போலீசார், மர்ம கும்பலை பிடிக்க முற்பட்ட நிலையில், போலீசாரை நோக்கி பெட்ரோல்

குண்டுகளை வீசி உள்ளனர். இது பற்றி தகவல் அறிந்தது வந்த போலீசார், ரவுடிகள் கும்பல் யார்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்