உணவக சோதனைகள்.."அதிகாரம் இருப்பதால் அரசு அதிகாரிகள் சூப்பர் ஹீரோவாக நினைத்து கொள்ள கூடாது" - உயர் நீதிமன்றம்

x

உணவகங்களில் சோதனை செய்யும்போது, ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ பதிவு செய்து வெளியிட, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை ஹோட்டல்களின் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது விதிகளை பின்பற்றாமல், விளம்பரத்திற்காக ஊடகங்களை அழைத்துச் சென்று, வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு அதிகாரிகள் தன்னிடம் அதிகாரம் இருப்பதால், தங்களை சூப்பர் ஹீரோவாக நினைத்து கொள்ள கூடாது என்று அறிவுறுத்தியது. மேலும் சோதனையின்போது ஊடகங்களை ஏன் அழைத்து செல்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பியது. இனி சோதனைக்கு செல்லும்போது புகைப்பட கலைஞர் அல்லது வீடியோ பதிவாளரை அழைத்து செல்லலாம் என்றும், அதன் பதிவுகளை விசாரணை முடிவில்தான் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதுவரை ஊடகங்களுக்கு கொடுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை ஊடகங்களில் வெளியிட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதிஷ்குமாருக்கு இடைக்காலத் தடையும் நீதிமன்றம் விதித்தது.


Next Story

மேலும் செய்திகள்