"நெல்லை மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்".. கவுன்சிலர்களுக்கு பறந்த நோட்டீஸ்

x

நெல்லை மாநகராட்சி மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வரும் 12ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் வைத்து விவாதித்து முடிவு எடுக்க, அனைத்து கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

திமுகவைச் சேர்ந்த நெல்லை மேயர் சரவணனுக்கும்

அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

பெரும்பான்மையான கவுன்சிலர்கள் கையெழுத்துட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி ஆணையரை சந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர். மனு மீதான நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெற்றது உண்மைதானா என்பது குறித்து விசாரணை நடத்திய ஆணையரும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வரும் 12ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் வைத்து விவாதித்து முடிவு எடுக்க அனைத்து கவுன்சிலர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் சட்ட விதி 1998இன் படி நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த விவாதம் நடத்தப்பட்டு, வாக்கு பதிவு நடத்தப்படும் எனவும், அவர் அளித்துள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது


Next Story

மேலும் செய்திகள்