"1 வாரத்திற்குள் வங்கி கணக்கில் நிவாரணத் தொகை".. வெளியான அறிவிப்பு

x

மிக் ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார். நியாய விலைக் கடைகள் மூலமாக நிவாரணத் தொகை கடந்த 17ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை அட்டை தாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பாதிப்பு கூடுதலாக இருக்கும் விவரத்தை பூர்த்தி செய்து, ரேஷன் கடைகளில் கொடுத்தால், அவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது...

அதன்படி4 மாவட்டங்களையும் சேர்த்து 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், விண்ணப்பங்களை கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது என்றும், முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அவர்களது வங்கி கணக்கில் நிவாரணத் தொகை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்