ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்...
x

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ராமேஸ்வரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த புதனன்று ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 1 படகு மற்றும் 6 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிறையில் அடைத்தனர். இதையடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகம் வெறிச்சோடியுள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு சுமார் சுமார் 5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்