ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு

x

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், திமுக எம்.பி கனிமொழி-யின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நள்ளிரவில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உரிய மருத்துவ ஆலோசனையும், சிகிச்சை வழங்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை சீராக இருப்பதால், சிகிச்சை முடிந்து விரைவில் ராஜாத்தி அம்மாள் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்