சொன்ன மாதிரியே சிறைக்கு போயிடுவாரோ "ராஜா பகவத்" - சுத்தி சுத்தி ரெய்டு- ரிவிட் அடித்த ஆபீஸர்ஸ்

x
  • சொன்ன மாதிரியே சிறைக்கு போயிடுவாரோ "ராஜா பகவத்" - சுத்தி சுத்தி ரெய்டு- ரிவிட் அடித்த ஆபீஸர்ஸ்
  • சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு என்என் கார்டன் பகுதி 3வது தெருவில் கேஜிஎஃப் எனும் துணிக்கடையை நடத்தி வருபவர் விக்கி என்ற விக்னேஷ்.
  • அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக 3 கடைகள் உள்ளன...
  • சமூக வலைத்தளங்களில் பிரபலமான விக்கி நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி வியாபாரத்திற்காக விக்கி சிறுவர்களை கடையில் பணியில் அமர்த்தி இருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்...
  • பணியில் இருந்த தொழிலாளர்களை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் பணியில் இருந்தது தெரிய வந்தது. நால்வரில் ஒரு சிறுவன் தப்பியோடிவிட மூவரும் குழந்தைதள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
  • மேலும் இது குறித்து குழந்தை தொழிலாளர் மாவட்ட தடுப்பு குழு அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
  • இந்நிலையில் விக்னேஷ் மீது போலீசார் குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
  • மேலும் இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்த விக்னேஷிற்கு சம்மன் அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
  • ஏற்கனவே விக்னேஷ் வியாபார போட்டி காரணமாக ஆட்களை வைத்து மற்றொரு கடை உரிமையாளரை தாக்கியதற்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..

Next Story

மேலும் செய்திகள்