3 மணி நேரம் அடித்து ஊற்றிய மழை... அத்தனை அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த நிலையில், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், அண்ணாசாலை, நாயுடு புரம், பாக்கியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது.
x

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்த நிலையில், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், அண்ணாசாலை, நாயுடு புரம், பாக்கியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது.இதனால் கிறிஸ்துவ தேவாலயம் வளாகத்திற்குள் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து வெள்ளிநீர் வீழ்ச்சிஅருவி, வட்டக்கானல் அருவி,தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவி முன் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்