புழல் சிறையில் அதிர்ச்சி... டியூப் லைட்டுகளை உடைத்து.... உடல் முழுவதும் கீறல் - கைதிகள் ரகளை

புழல் சிறையில் ட்யூப் லைட்டுகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 8 சிறைக் கைதிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் நெப்போலியன், ரவிச்சந்திரன் உள்பட 8 பேர் சிறையில் உள்ள டியூப் லைட்டுகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நெப்போலியன், ரவிச்சந்திரன் இருவரும் உடைந்து டியூப் லைட்டுகளை தங்களது உடலில் கீறி கொண்டதால் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 சிறை கைதிகள் மீதும் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com