தமிழகத்தில் நீளும் ஐடி ரெய்டு - அதிரடி காட்டும் அதிகாரிகள்
தமிழகத்தில் அனல்மின் நிலையங்களுக்கு தேவையான கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரில், தொடர்ந்து நான்காவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தமிழக அரசின் மின்சார வாரியத்தின் கீழ் மேட்டூர், தூத்துக்குடி மற்றும் வடசென்னையில் அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனல்மின் நிலையங்களுக்கு தேவையான கருவிகளை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதில், முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் காசி என்பவரின் இல்லத்தில் வருவான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், சென்னை ராதா இன்ஜினியரிங் ப்ரைவெட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் இருந்து மின்சார ஆலைகளுக்கான கருவிகளை வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்ததாக கூறப்பட்டது. இதில், கடந்த 20 ஆம் தேதி நிறுவனத்தின் அலுவலங்கள் மற்றும் அவை தொடர்பான இடங்களிலும், தமிழகத்தில் பல பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து நான்காவது நாளாகவும் சோதனை நடத்திய அதிகாரிகள், சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.
