கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

பற்கள் பிடுங்கப்பட்டு சித்திரவதை செய்த விவகாரத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இழப்பீடு வழங்க கோரி பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். காவல்துறையினர் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்க வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகளில் இடம் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com