அன்னதான இலைகளில் இருந்து உரம் தயாரிப்பு.. ராட்சத குழாய் பொருத்தும் பணிகள் மும்முரம்..

x

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அன்னதான இலைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பழனி முருகன் கோயிலில் 20 லட்சம் ரூபாய் செலவில், பக்தர்கள் உணவு உட்கொண்ட இலைகளை அரைத்து கூழாக்கி உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக, அன்னதான கூடத்தில் இருந்து மலையடிவாரம் வரை ராட்சத குழாய் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நவீன இயந்திரத்தில் இலைகள், காய்கறி கழிவுகளை போட்டு அரைத்து கூழாக்கி, குழாய் மூலம் மலையடிவாரத்தில் அமைக்கப்பட உள்ள உரத்தொட்டியில் சேமித்து உரமாக மாற்றப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்