"பவர்ல எரியல... அவன் செஞ்ச தவறுல எரியுது"...திருட்டை மறைக்க லாரிக்கு தீவைத்த பயங்கரம்...

x

சேலம் - சங்ககிரி

திடீரென தீப்பற்றி எரிந்த சரக்கு லாரி...

விசாரணையில் வசமாக சிக்கிய டிரைவர்...

"பவர்ல எரியல... அவன் செஞ்ச தவறுல எரியுது"

திருட்டை மறைக்க லாரிக்கு தீவைத்த பயங்கரம்...

மகாராஷ்டிராவிலிருந்து பஞ்சு முட்டைகள் ஏற்றி வந்த லாரி அது..

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வந்தவுடன் தீடிரென தீப்பிடித்து எரிந்தது..

இரவில் குபுகுபுவென பற்றி எரிந்த லாரியை மீட்ட தீயனைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்..

லாரியை ஓட்டி வந்த செல்வராஜிடமும் பிரபுவிடமும் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போது திடீரென பஞ்சு மூட்டைகள் பற்றி எரிந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறிய பதில் இடைதரகரான பிரகாஷ் என்பவருக்கு ஏற்புடையதாக இல்லை. அதோடு லாரிக்குள் 46 லட்சம் மதிப்புள்ள 150 பஞ்சு மூட்டைகள் இருந்துள்ளன. ஆனால் எரிந்து கிடந்த மிச்ச மீதியை பார்த்த போது மூட்டைகள் குறைவாக இருந்ததை பிரகாஷ் கண்டுபிடித்திருக்கிறார். இதனால் டிரைவர் மீது அவருக்கு மேலும் சந்தேகம் வலுத்திருக்கிறது.

உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் டிரைவர்களிடம். கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருக்கிறார்கள் அப்போது தான் நடந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

லாரி டிரைவர்களான செல்வராஜூம் பிரபுவும் அண்ணன் தம்பிகள்.

சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் தாங்கள் வைத்திருந்த லாரியால் பெரிய அளவில் லாபம் எதுவும் கிடைக்கவில்லை. மாதா மாதம் லாரிக்கு இ எம் ஐ கட்டுவதற்கே திண்டாடியிருக்கிறார்கள். அங்கு இங்கு என கடன் வாங்கி செலவு செய்து வந்திருக்கிறார்கள். கடன் தொகை பல லட்சங்களை எட்டியிருக்கிறது.

கடனை அடைக்க முடியாமல் அண்ணன் தம்பி இருவரும் திண்டாடியிருக்கிறார்கள். ஆக்டிங் டிரைவர் வேலைக்கு சென்று வந்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் தான் லாரி புக்கிங் இடைதரகரான பிரகாஷ் என்பவர் மூலம் மகாராஷ்ட்ரா வரை சென்று 46 இலட்சம் மதிப்புள்ள 150 பஞ்சு மூட்டைகள் ஏற்றி வருவதற்கான ஆஃபர் கிடைத்திருக்கிறது.

வாடகை லாரியை எடுத்துக் கொண்டு அண்ணன் தம்பி இருவரும் மகாராஷ்டிரா சென்றிருக்கிறார்கள். லோடை ஏற்றிக் கொண்டு தமிழகம் நோக்கி விரைந்திருக்கிறார்கள்.

அப்போது தான் அவர்களுக்கு ஒரு திருட்டு யோசனை வந்திருக்கிறது. 30 லட்சம் மதிப்புள்ள 92 பஞ்சு மூட்டைகளை திருடி மொத்த கடனையும் அடைத்து லைபில் செட்டிலாக நினைத்திருக்கிறார்கள். அதற்காக ஒரு விபத்து திட்டத்தையும் போட்டிருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த அன்று சேலம் அருகேயுள்ள ராக்கிபட்டி பகுதியில் 92 பஞ்சு மூட்டைகளை திருடி பத்திரப்படுத்தி உள்ளனர்.

பிறகு சேலம் சங்ககிரி அருகேயுள்ள தாமஸ் காலனி பகுதியில் லாரியுடன் சேர்த்து மீதமுள்ள பஞ்சு மூட்டைகளை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார்கள்.

தாங்கள் போட்ட திட்டம் கச்சிதமாக இருக்கும் என்று நம்பிய அண்ணன் தம்பி இருவரும் போலீஸ் விசாரணையில் சிக்கி கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜையும் பிரபுவையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதோடு அவர்கள் திருடிய 92 பஞ்சு மூட்டைகளை மீட்டு இடைதரகர் பிரகாஷிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.



Next Story

மேலும் செய்திகள்