பொங்கல் பரிசு - வெளியான புதிய தகவல்

பொங்கல் பரிசு - வெளியான புதிய தகவல்
x

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

விழுப்புரம் மாவட்டம் பிடாகம் குச்சிபாளையம் கிராமத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விவசாயிகளின் தோட்டங்களில் இருந்து ஆறடி உயரம் உள்ள கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய முற்பட்டனர்.

ஆனால் 5 அடி உயரமுள்ள கரும்புகளையும் சேர்த்து வாங்கிக் கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அதை ஏற்க மறுத்தனர்.

இதனால் வாக்குவாதம் எழுந்ததை அடுத்து, ஆட்சியர் மோகன் சமரசம் பேச முயன்றார்.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அப்பகுதி முழுவதும் கரும்பு வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் வழங்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்