பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.. புதிய ஆடைகள் அறிமுகம்.. கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவிப்பு..

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் எனப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், ஆடைகளின் புதிய டிசைன்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆயிரம் டிசைன்களில் புதிய புடவைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், பட்டுப்புடவைகள் 35 ஆயிரம் ரூபாய் வரையிலும், காட்டன் புடவைகள் மூவாயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்ட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களுக்காக லுங்கி, டவல்கள், வீட்டு உடைகள் உள்ளிட்டவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அனைத்து வகையான உடைகளுக்கும் ஜனவரி 31-ஆம் தேதி வரை 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றும், பொங்கல் பண்டிகையில் 80 கோடி ரூபாய் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்