குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி தம்பதி. மீட்க சென்ற அதிகாரிகளின் நிலை..?

x

நிலக்கோட்டை அருகே, போதிய உணவின்றி தவித்த பார்வை குறைபாடுடையை மாற்றுத்திறனாளி தம்பதியின் குழந்தைகளை அரசு அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள குல்லலக்குண்டில் வசித்து வரும் நாகராஜ்-தேவி தம்பதியினருக்கு, 3 வயதில் ஒரு குழந்தையும், ஆறு மாத கைக்குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த சில மாதங்களாக இருவருக்கும் போதிய வருமானம் இல்லாததால், குழந்தைகளுக்கு சரிவர உணவளித்து பராமரிக்க முடியாததாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் உடல் மெலிந்து காணப்பட்ட குழந்தைகளை போலீசார் உதவியுடன் அதிகாரிகள் மீட்கச்சென்றனர். அப்போது குழந்தைகளை மீட்க விடாமல் மாற்றுத்திறனாளிகள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்