வாட்ஸ் அப்பில் மனைவி அனுப்பிய புகைப்படம்- அதிர்ச்சி அடைந்த கணவன்-வெளியான பகீர் காரணம்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எட்டிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த் - வீரழகு தம்பதி.


இவர்களுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தையில்லாத காரணத்தால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளனர்.


இந்நிலையில்,ஆனந்தின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தான் வேறோரு நபருடன் திருமண கோலத்தில் உள்ள புகைப்படத்தை வீர அழகு அனுப்பியதாக தெரிகிறது.


மேலும், தன்னுடன் வேலை செய்து வரும் நபர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை தேடி வர வேண்டாம் என்றும் அதில் பதிவிட்டுள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த், தனது மனைவி வேறு ஒரு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் வடமதுரை போலீசில் புகார் அளித்துள்ளார்.


இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்