பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் - "குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சி"-ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு

x

பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் - "குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சி"-ஹெச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகரின் வீட்டிற்கு நேரில் சென்ற, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல்

தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, குற்றம் செய்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல குற்றத்தை செய்ய தூண்டுபவர்களும் குற்றவாளிகள்

தான் என்றார். ஆனால், இந்த விவகாரத்தில் திருமாவளவன், சீமான் போன்றவர்கள், திசை திருப்பி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினர்.

அத்துடன், தமிழகத்தில் பாப்புலர் பிரண்டு ஆப் இந்திய அமைப்பை தடை செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சரை வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்