திமுக நிர்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பரபரப்பு சிசிடிவி காட்சி

மணலியில் திமுக நிர்வாகி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
x

சென்னை மணலி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் மாரியப்பன் என்பவர், திருவொற்றியூர் மேற்கு பகுதி வர்த்தகர் அணி துணை அமைப்பாளராக உள்ளார் .

கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாரியப்பனை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல் ஒன்று, அவரது கடையின் உள்ளே பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து மாரியப்பன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் மாரியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட குள்ளமணி மற்றும் சுதாகரை ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்