"உடனே செய்ய முடியாது" - பெரியார் பல்கலை. துணைவேந்தர் சொன்னதும் கொந்தளித்த பேராசியர்கள்

x

பெ ரியார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற பேரவை கூட்டத்திலிருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள்

முறையான பதில் அளிக்காத துணைவேந்தரை கண்டித்து வெளிநாடப்பு செய்தனர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது இந்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்புக்கல்லூரியில் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி பேரவை கூட்டம் நடைபெற்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது வழக்கம் இந்த நிலையில் இன்று ஆட்சி பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது மேலும் ஆட்சி பெறவை கூட்டம் நடைபெறும் அதே நேரத்தில் அதே நாளில் ஆட்சி பேரவை உறுப்பினர் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது இந்த கூட்டத்தில் அரசு கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் இதில் அரசு பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என ஏழு நாட்கள் முன்பே அரசு உத்தரவு இட்டிருந்தோம் ஏன் இதுவரை பணியிடம் நீக்கம் செய்யவில்லை என கேட்டனர் இதற்கு துணைவேந்தர் அரசு உத்தரவிட்டால் உடனே பணியிட இயக்கம் செய்ய முடியாது அது எனது ஆய்வில் உள்ளது உங்களுக்கு பதில் சொல்ல முடியாது என கூறினார் தொடர்ந்து ஆட்சி பேரவை கூட்டமும் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தக் கூடாது ஏதாவது ஒன்று நடத்துங்கள் என கேட்டதற்கு இரண்டும் நடத்துவதற்கு எனக்கு அதிகாரம் உள்ளது என பேசியதாக கூறி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் வெளிநடப்பு செய்தனர் தொடர்ந்து பேரவை கூட்டத்திற்கு வெளியே கோசங்கள் எழுப்பினர் தொடர்ந்து கூட்டம் அரங்கிற்குச் சென்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து மீண்டும் 3:30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என துணைவேந்தர் அறிவித்து சென்றார்


Next Story

மேலும் செய்திகள்