அடிக்கடி பார்சல் அனுப்பும் நபர்களே உஷார்!.. நைசாக காணாமல் போகும் பொருள்.. - கைக்கு வரும் வெறும் கவர்

x

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட பார்சல் காலியாக இருந்த நிலையில், கூரியர் நிறுவனம் மீது இளைஞர் குற்றஞ்சாட்டியுள்ளர். சென்னை, தேனாம்பேட்டையில் பணியாற்றி வரும் ராஜன் என்பவர் தன்னுடைய நண்பருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் பர்ஸை பரிசளிக்க விரும்பியுள்ளார். இதனால், பெங்களூருவில் உள்ள தனது உறவினர் மூலம் தனியார் கூரியர் மூலமாக அதனை கடந்த ஆகஸ்டு மாதம் பெற்றுள்ளார். ஆனால், பார்சலை திறந்து பார்த்தபோது அது காலியாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து கூரிய நிறுவனித்திடமும் புகார் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்